ராஷ்டிரிய லோக் தல் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பத்தூர் RGG Imports Exports மானூர் வளாகத்தில் 05-12-2025 வெள்ளிக் கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் திரு N ரவி பிள்ளை அவர்கள்,மாநில இளைஞரணி பொறுப்பாளர் திரு A செந்தில் வடிவேலு அவர்கள் மற்றும் திருச்சி மாவட்டத் துணைத் தலைவர் திரு K சரவணன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளின் பிரச்சனைக்களுக்காக கடுமையாக போராடி வருபவரும் விவசாய அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஒருவரான திரு S ராஜேஷ் அவர்கள் ராஷ்டிரிய லோக் தல் கட்சியின் தமிழ்நாடு விவசாய அணியின் மாநில தலைவராக பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாய அமைப்பின் தலைவர் திரு S ராஜேஷ் அவர்கள் தலைமையில் 40 க்கும் மேற்பட்டவர்கள் விவசாய அமைப்பு சார்ந்தவர்கள் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1 மணி அளவில் நடைபெறும் தொடர்ச்சியான கூட்டத்தில் மாவட்ட அமைப்பு/மகளிர் அமைப்பு மற்றும் நமது அமைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளர்களையும் நியமித்து விரைவில் பட்டியல் சமர்ப்பித்து உள்ளதாக உறுதிமொழி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

N ரவி பிள்ளை
பொதுச் செயலாளர்
ராஷ்ட்ரிய லோக் தல்
Rashtriya Lok Dal (RLD)
தமிழ்நாடு
05-12-2025